ஜாமீன் மனுவில் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று குறிப்பிட்ட சஞ்சனா

ஜாமீன் மனுவில் தனது பெயரை அர்ச்சனா என்கிற சஞ்சனா கல்ராணி என்று குறிப்பிட்டு உள்ள சஞ்சனா தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
நடிகை சஞ்சனா
நடிகை சஞ்சனா
Published on

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் சஞ்சனா மதம் மாறி, டாக்டரான அஜீஸ் பாஷா என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதை சஞ்சனா மறுத்து விட்டார்.

இதற்கிடையே அஜீஸ் பாஷா, சஞ்சனா திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்த நிலையில் ஜாமீன் மனுவில் தனது பெயரை அர்ச்சனா என்கிற சஞ்சனா கல்ராணி என்று குறிப்பிட்டு உள்ள சஞ்சனா தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார். இதனால் அவருக்கு திருமணம் நடந்ததா? இல்லையா? என்று சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com