கைது
கைது

காரில் சந்தன கட்டைகள் கடத்திய அய்யலூர் வாலிபர்கள் 3 பேர் கைது

காரில் சந்தன கட்டைகள் கடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
Published on

வடமதுரை:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மர்மமான கார் நின்று கொண்டு இருந்தது. போலீசார் அந்த காரில் சோதனை செய்த போது சந்தன கட்டைகள் இருந்தது. தெரிய வந்தது. இதனையடுத்து காரில் வந்த 3 பேரை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனச்சரக அலுவலர் மதிவாணன், சம்பத், வினோத்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள முடக்கு பட்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி, வேங்கனூரைச் சேர்ந்த சின்னையா, ரமேஷ், என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து காருடன் சந்தன கட்டைகளையும் பறிமுதல் செய்தனர். 

இவர்கள் இதே போன்ற வழக்கில் பல முறை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைதான 3 பேரும் மேலூர் மற்றும் திருப்பத்தூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com