ராசிபுரம் அருகே சந்தன மரம் கடத்தியவர் கைது

ராசிபுரம் அருகே மல்லூர் காப்புக் காட்டில் சந்தன மரம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 22 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராசிபுரம் அருகே சந்தன மரம் கடத்தியவர் கைது
Published on

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்ட வன அதிகாரி காஞ்சனா உத்தரவின்படி ராசிபுரம் வன அலுவலர் பி.தங்கராஜூ தலைமையில், வனவர் என்.சேகர் மற்றும் வன சிப்பந்திகளுடன் மல்லூர் காப்புக் காட்டில் ரோந்து வந்தனர்.

அப்போது அங்கு சந்தேகமான முறையில் சாக்குப் பையுடன் வந்த ஒருவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகாவைச் சேர்ந்த நாகப்பன் மகன் திருப்பதி (வயது 24) என்பது தெரியவந்தது. வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கடத்தி வந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 22 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகளை கைப்பற்றினார்கள்.

இதையொட்டி திருப்பதியை கைது செய்தனர். பிறகு ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com