மணல் கடத்தியதாக டிராக்டர் பறிமுதல்: தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

மணல் கடத்தியதாக டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டதால் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்தார்.
தற்கொலை
தற்கொலை
Published on

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள வில்லூர் போலீஸ் சரகத்திற்குட்பட்டது வி.கோபாலபுரம். இங்குள்ள தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தர்மர். இவரது மகன் முருகன் (வயது45), விவசாயி.

இவர் மீது சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த புகாரில் முருகனுக்கு சொந்தமான டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனால் மனவேதனை அடைந்த முருகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அவரது மனைவி இளஞ்சியம் புகாரின்பேரில் வில்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com