அரியாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் - 2 பேர் கைது

அரியாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

பாகூர்:

அரியாங்குப்பம் வீராம்பட்டினம் அருகே உள்ள சுண்ணாம்பாற்று முகத்துவாரத்தில் மணல் கடத்தப்படுவதாக அரியாங்குப்பம் ரோந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்று அந்த வழியாக வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து டிராக்டர் ஓட்டி வந்தவரையும், மற்றொருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அரியாங்குப்பம் அம்பேத்கார் நகரை சேர்ந்த நாகமுத்து (வயது35) மற்றும் ராமு(36) என்பது தெரியவந்தது. பின்னர்  நாகமுத்து, ராமுவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் கைது செய்தார். இதில் சம்பந்தப்பட்ட முனுசாமி என்பவர் தப்பி ஓடிவிட்டார். மேலும் மணல் கடத்த பயன்படுத்தபட்ட டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com