கந்திகுப்பம் அருகே மணல் கடத்திய டிப்பர் லாரி- ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல்

கந்திகுப்பம் அருகே கள்ளத்தனமாக மணல் கடத்திய டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
டிப்பர் லாரி
டிப்பர் லாரி
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள சின்னமட்டாரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் சின்னமட்டாரப்பள்ளி ராஜீலு மலை அடிவாரப் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள ஒரு குட்டையில் கள்ளத்தனமான டிப்பர் லாரியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தவர்கள், டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி. எந்திரம் ஆகியவற்றை விட்டுவிட்டு, தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கந்திகுப்பம் போலீசில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் போலீசார் வழக்குபதிவு செய்து, டிப்பர் லாரி உரிமையாளரும், ஓட்டுனருமான மேல்காத்தாடிகுப்பம் கிராமத்தை சேர்ந்த மார்ட்டின்சகாயராஜ் (வயது 28), ஜே.சி.பி. எந்திர டிரைவரான எலத்தகிரி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சிதம்பரம் (வயது 38) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி. எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com