முசிறி அருகே மணல் திருடிய 5 வாலிபர்கள் கைது

முசிறி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மொபட்டுகளில் மணல் மூட்டைகளை கடத்திய 5 வாலிபர்களை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

முசிறி:

முசிறி அருகே வீரமணிப்பட்டி பகுதியில் அய்யாற்றில் மர்மநபர்கள் மொபட்டுகளில் மணல் கடத்துவதாக முசிறி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்துறையினர் வீரமணிப்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது முசிறியை அடுத்த நெய்வேலி செல்லும் சாலையில் வீரமணிப்பட்டி மயானம் அருகே 5 பேர் மொபட்டுகளில் மணல் மூட்டைகளை கடத்தி சென்றனர். அவர்களை போலீசார் சுற்றி பிடித்தனர். விசாரித்ததில் அவர்கள் சின்னகொடுந்துறையை சேர்ந்த புஷ்பராஜ் (வயது19), சிவகுமார் (26), கிருஷ்ணன் (24), பஞ்சப்பட்டி கார்த்திக் (20), வீரமணிப்பட்டி லோகேஸ்வரன் (19) என்பது தெரியவந்தது. 

இதையடுத்து திண்ணக்கோணம் கிராம நிர்வாக அதிகாரி விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் 5 பேரையும் கைதுசெய்து மணல் திருட பயன்படுத்திய மொபட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com