சிப்காட் அருகே மணல் கடத்தியவர் கைது

சிப்காட் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்த நபரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

சிப்காட் (ராணிப்பேட்டை):

சிப்காட் அடுத்த பெரியத்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன் (வயது 52). இவர் நேற்று பெரியத்தாங்கல் அருகே மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்தார். அப்போது அந்த வழியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட சிப்காட் போலீசார் விரைந்து வந்து, மணல் கடத்திய சகாதேவனை கைது செய்தனர். 

அவரிடம் இருந்து மாட்டுவண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com