சாணார்பட்டி அருகே சூதாடிய 5 பேர் கைது

சாணார்பட்டி அருகே சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

சாணார்பட்டி அருகே உள்ள கன்னியாபுரம் பகுதியில் சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசு தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் அதே ஊரை சேர்ந்த பாண்டி (வயது 35), சுப்பையா (40), தாமரைகண்ணன் (33), முருகன் (35), பாலகிருஷ்ணன் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரம் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com