சமயநல்லூர் பகுதியில் 14-ந் தேதி மின் நிறுத்தம்

சமயநல்லூர் பகுதியில் வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் சப்ளை தடை செய்யப்படுகிறது.
மின்சாரம் நிறுத்தம்
மின்சாரம் நிறுத்தம்
Published on

வாடிப்பட்டி:

சமயநல்லூர் மின் வினியோக செயற் பொறியாளர் மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமயநல்லூர் கோட்டத்துக்குட்பட்ட மாணிக்கம்பட்டி, அலங்காநல்லூர், வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை துணை மின் நிலையங்களில் வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

எனவே அந்த நேரத்தில் ராஜாக்காள் பட்டி, மறவர்பட்டி, சத்திரவெள்ளாளபட்டி, வலையபட்டி, எர்ரம்பட்டி, கோணப்பட்டி, பாலமேடு, சின்ன பாலமேடு, மாணிக்கம்பட்டி, சேந்தமங்கலம், பொந்துகம்பட்டி, 66-பி மேட்டுப்பட்டி, உசிலம்பட்டி, அலங்காநல்லூர், கோட்டைமேடு, கல்லணை, என்.எஸ்.எம். சுகர் மில் ரோடு, 15பி மேட்டுப்பட்டி, குறவன்குளம், சிறுவாலை, அம்பலத்தாடி, அழகாபுரி, புதுப்பட்டி, கோவில்பட்டி, வைகாசிபட்டி, அய்யூர், முடுவார்பட்டி, ஆதனூர், அச்சம்பட்டி பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.

இதே போல் அங்கப்பண்கோட்டம், அய்யங்கோட்டை, சொக்க லிங்கபுரம், கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, வைரவநத்தம், நகரி, குட்லாடம்பட்டி, குட்டிக்க ரடு, மேட்டுநீரேத்தான், பெருமாள்பட்டி, பூச்சம் பட்டி, ராமையன் பட்டி, சாணாம்பட்டி, செம்மினிப் பட்டி, சமத்துவபுரம், விராலிப்பட்டி, சி.புதூர், ஆண்டிபட்டி, வடுகப்பட்டி, தனிச்சியம், மேலசின்னம்பட்டி, ஆலங்கொட்டாரம், திருமால்நத்தம், ராயபுரம், ரி‌ஷபம், நெடுஞ்குளம், எல்லையூர், டி.மேட்டுப் பட்டி, கரடிக்கல், கெங்கமுத்து, நாராயணபுரம், ராமகவுண்டன்பட்டி பகுதிகளிலும் மின் வினியோகம் தடைபடும்.

மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com