புல்வாமாவில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்காக நிதி திரட்டும் சல்மான் கான்
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் குடும்பங்களுக்காக தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் நடிகர் சல்மான் கான் நிதி திரட்டி வருகிறார். #SalmanKhan #BeingHuman #Pulwamamartyrs #PulwamaAttack
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசுகளும் தனிநபர்களும் பெருமளவில் நிதியுதவி செய்து வருகின்றனர். இந்தி நடிகர் அமிதாப் பச்சன் 40 வீரர்களின் குடும்பங்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அளிப்பதாக அறிவித்தார்.