

போரூர்:
சாலிகிராமம் தேவராஜ் நகர் வீரமாமுனிவர் தெரு வைச் சேர்ந்தவர் மார்டின், தனியார் ஓட்டலில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
நேற்று அதிகாலை அவர் பணி முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது அறையில் இருந்த பர்சு மற்றும் 2 செல்போன்கள் மாயமாகி இருந்தது. பர்சில் ரூ. 10 ஆயிரம், 4 ஏ.டி.எம். கார்டுகள், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவை இருந்தது.
இது குறித்து விருகம்பாக்கம் போலீசில் மார்டின் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வேலுமணி அந்த வீட்டில் இருந்த கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.
அதில் இளம்பெண் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து மொபைல் மற்றும் பணத்தை கொள்ளையடித்து திரும்பி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவரை விருகம்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews