சேலத்தில் ரவுடியை கைது செய்ததற்கு எதிர்ப்பு: குடும்பத்தினர் 8 பேர் தீக்குளிக்க முயற்சி

சேலத்தில் ரவுடியை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்தினர் 8 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சேலம்:

சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோழிபாஸ்கர்.

பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் பொதுமக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக கோழி பாஸ்கரும் நேற்ற கைது செய்யப்பட்டார். இதனால் அவரது உறவினர்கள் ஆத்திரமடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அவரது தாய் மகாலட்சுமி, மனைவி உஷா மற்றும் குடும்பத்தினர் உள்பட 8 பேர் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் திடீரென மண் எண்ணை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதைப்பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அன்ன தானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் அவர்களை ஒரு வாகனத்தில் ஏற்றி அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சென்று வாகனத்தில் இருந்து இறங்கிய அவர்கள் தனித்தனியாக ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் நேற்று இரவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com