

சேலம்:
தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசு டி.என்.சி.எஸ்.சி-க்கு இணையாக ஊதியம், ஓய்வூதியம், பணி வரன்முறை மற்றும் பொட்டல முறை உள்ளிட்ட கோரிக்கை பரிசீலனை குழுவின் அறிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடைமுறைப்படுத்திட வலியுறுத்தி இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கி பேசினார். இதில் ரேசன் கடை பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோஷங்கள் எழுப்பினர்.