சேலத்தில், வெவ்வேறு இடங்களில் பெண் என்ஜினீயர் உள்பட 2 பேர் தற்கொலை

சேலம் அருகே வெவ்வேறு இடங்களில் பெண் என்ஜினீயர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சேலம்:

சேலம் கந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதப்பன். இவர் மெய்யனூரில் உள்ள மின்சார அலுவலகத்தில் வயர்மேனாக வேலைப்பார்த்து வருகிறார். இவருடைய மகள் அருள்மொழி (வயது 26). என்ஜினீயரான இவருக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதனிடையே அருள்மொழிக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த அருள்மொழி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் பெண் என்ஜினீயர் தற்கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் பொன்னம்மாபேட்டை வாய்க்கால்பட்டறை பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (25). டிப்ளமோ முடித்துள்ள இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பால் பூத்தில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கொரோனா காரணமாக பால் பூத் மூடப்பட்டதால் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். அவரை வேறு வேலைக்கு செல்லுமாறு வீட்டில் உள்ளவர்கள் கூறி உள்ளனர்.

இந்தநிலையில் சரியான வேலை கிடைக்காத மனவேதனையில் இருந்த ஹரிகிருஷ்ணன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com