சேலம் அருகே ஈரடுக்கு ரெயிலில் தீ விபத்து

சேலம் அருகே ஈரடுக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரெயில்
ரெயில்
Published on

சேலம்:

கோவையில் இருந்து தினமும் காலையில் சேலம் வழியாக பெங்களூருக்கு ஈரடடுக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

வழக்கம் போல் இன்று காலை கோவையில் இருந்து அந்த ரெயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. சேலம் ஜங்‌ஷன் ரெயில் நிலையம் அருகே வந்த போது அந்த ரெயிலில் சி-5 கோச்சில் இருந்து புகை வெளியேறியது.

இதை கவனித்த பயணிகள் ஊழியர்களிடம் தெரிவித்தனர். இதற்கிடையே ரெயில் 8.10 மணிக்கு சேலம் ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. ஊழியர்கள் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அவர்கள் ரெயில் பெட்டியை வந்து பார்வையிட்ட போது பிரேக் பாயிண்ட் உடைந்து தண்டவாளத்தில் உரசியதால் புகை வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பின்னர் சரி செய்யப்பட்டு சுமார் 9.40 மணி அளவில் ரெயில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com