சேலம் அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி விபத்தில் பலி

சேலம் அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது ஆம்னி வேன் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி விபத்தில் பலி
Published on

கொண்டலாம்பட்டி:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவர் மனைவி அங்காயி (வயது 60). இவர் நேற்று கொண்டலாம்பட்டியை அடுத்த அரியானூர் ஜங்சன் பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், சாலையை கடக்க முயன்றார். அப்போது அங்கு அந்த வழியாக வந்த ஆம்னி வேன் அவர் மீது மோதியது.

இதில் அங்காயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் ரவிகுமார், அங்காயி உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த அங்காயி மகள் செல்வி (43) சம்பவ இடத்துக்கு வந்து உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com