

பெங்களூரில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த பொள்ளாச்சியைச் சேர்ந்த தனசேகர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.