புதிய கல்வி கொள்கையை ரத்து செய்யக்கோரி ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தேசிய புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ம.தி.மு.க. மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய கல்வி கொள்கையை ரத்து செய்யக்கோரி ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
புதிய கல்வி கொள்கையை ரத்து செய்யக்கோரி ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

சேலம்:

தேசிய புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ம.தி.மு.க. மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட செயலாளர் வக்கீல் ஆனந்தராஜ் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோகுல், துணை அமைப்பாளர் ரிஸ்வான் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மத்திய மாவட்ட அவைத்தலைவர் லிபியா ஆர்.சந்திரசேகர், மாநகர செயலாளர் நடேசன், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் விஜயகுமார், ரஜினிகாந்த், வி.விஜயகுமார், பாரூக் அலி, மாவட்ட வக்கீல் அணி செயலாளர் சந்திரசேகரன், ஒன்றிய செயலாளர் மாதவன், திருவாக்கவுண்டனூர் பகுதி தைரிய சீலன், இலக்கிய அணி ஆடிட்டர் ஜீவானந்தம், இளைஞர் அணி நிர்வாகிகள் நாகேந்திரன், ராஜமாணிக்கம் உள்பட ம.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com