சேலத்தில் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது

சேலத்தில் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலத்தில் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் களரம்பட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த முதியவர் சின்னசாமி என்பவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் பெற்றோர் சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், சின்னசாமி மீது புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சின்னசாமியை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் குடிபோதையில் மாணவியிடம் அத்துமீறியது தெரியவந்தது.

இதையடுத்து சின்னசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com