சேலத்தில் இருந்து கேரளாவுக்கு ரூ.33 லட்சம் ஹவாலா பணம் கடத்தல்

சேலத்தில் இருந்து கேரளாவுக்கு ரூ.33 லட்சம் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். #HawalaMoney
சேலத்தில் இருந்து கேரளாவுக்கு ரூ.33 லட்சம் ஹவாலா பணம் கடத்தல்
Published on

கொழிஞ்சாம்பாறை:

சேலத்தில் இருந்து கேரளாவுக்கு லட்சக்கணக்கில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கேரள மாநிலம் பாலக்காடு போலீஸ் சூப்பிரண்டு ஷாபுவுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் பாலக்காடு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலவியை தொடர்பு கொண்டு இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்அலவி கல்மண்டபம்- கோழிக்கோடு பைபாஸ் சாலையில் வாகன சோதனை மற்றும் ரோந்து சென்றார். சேகரிபுரம் என்ற இடத்தில் சென்றபோது ஒரு கார் வேகமாக வந்தது. அந்த காரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காரில் உள்ளவர் திருச்சூர் சேலக்கரையை சேர்ந்த சுரேஷ் என்பவர் என்று தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனையடுத்து போலீசார் காரை சோதனை செய்தனர்.

சோதனையில் கட்டுக்கட்டாக ரூ.33 லட்சம் பணம் இருந்தது. பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் சுரேசிடம் நடத்திய விசாரணையில் சேலத்தில் இருந்து மணப்புரத்துக்கு ஹவாலா பணம் கடத்திச் செல்வதாக கூறினார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #HawalaMoney

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com