முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 3.50 டன் தேங்காய்-கொப்பரை விற்பனை

கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.100.50க்கும், குறைந்தபட்சமாக ரூ.75.75க்கும், சராசரியாக ரூ.97.10க்கும் விற்பனையானது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

வெள்ளகோவில்:

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3.50 டன் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்றது. முத்தூர் சுற்றுவட்டார விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர். 5,459 தேங்காய்கள் வரத்து இருந்தன.

எடை 2,044 கிலோ. தேங்காய் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.30.80க்கும், குறைந்தபட்சமாக ரூ. 26.15க்கும், சராசரியாக ரூ.30.20க்கும் விற்பனையானது. விற்பனைத் தொகை ரூ.59 ஆயிரத்து 569. கொப்பரை 51 மூட்டைகள் வரத்து இருந்தன. எடை 1, 502 கிலோ.

கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.100.50க்கும், குறைந்தபட்சமாக ரூ.75.75க்கும், சராசரியாக ரூ. 97.10க்கும் விற்பனையானது. விற்பனைத்தொகை ரூ. 1 லட்சத்து 89 ஆயிரத்து 254. விவசாயிகள் 66பேர் , 13 வணிகர்கள் ஏலத்தில் பங்கேற்றனர்.

தேங்காய், கொப்பரை ஆகியவை மொத்தம் 3.50 டன் வரத்து இருந்தது. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 2.50 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட அதிகாரி ஸ்ரீ ரங்கன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com