சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். சுரங்கப்பாதையில் விரைவில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்

சைதாப்பேட்டையில் இருந்து டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதை பணிகள் முடிந்ததால் விரைவில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடக்கிறது.
சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். சுரங்கப்பாதையில் விரைவில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்
Published on

சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் 2 வழித்தடத்தில் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்று வருகின்றன. இதில் சைதாப்பேட்டையில் இருந்து மேதின பூங்கா வரையிலான பணிகளை மேற்கொண்டு வந்த ரஷ்ய நிறுவனம் பணிகளை திட்டமிட்ட காலத்தில் முடிக்காததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து எஞ்சியுள்ள பணிகளை அதாவது சைதாப்பேட்டையில் இருந்து டி.எம்.எஸ். வரையில் பணிகளை எல்.அண்ட்டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த பாதையில் சுரங்கப்பாதை தோண்டும் பணிகளும் ரெயில்பாதை அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளன.

இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

அண்ணாசாலையில் முதல் கட்டமாக சைதாப்பேட்டையில் இருந்து டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. ரெயில் பாதை, சிக்னல்கள் அமைத்தல், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

பணிகள் முடிந்து தயார் நிலையில் இருக்கின்றன. அதனால் இந்த தடத்தில் விரைவில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட உள்ளது. ஓரிரு மாதங்களுக்குள் சோதனை ஓட்டம் முடிந்த பிறகு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி ஒப்புதல் அளித்த பிறகு சேவை தொடங்கப்படும் என்றார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com