புரோ கபடி: சென்னை அணியின் உரிமையாளர் ஆனார் சச்சின் தெண்டுல்கர்

புரோ கபடி லீக்கில் தற்போது நான்கு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதில் சென்னை அணியை சச்சின் தெண்டுல்கர் கார்ப்பரேட் நிறுவனத்துடன் இணைந்து வாங்கியுள்ளார்.
புரோ கபடி: சென்னை அணியின் உரிமையாளர் ஆனார் சச்சின் தெண்டுல்கர்
Published on

2014-ம் ஆண்டு புரோ கபடி லீக் தொடர் ஆரம்பிக்கப்பட்டது, டெல்லி, மும்பை, பெங்களூரு. கொல்கத்தா, ஐதராபாத், பாட்னா, புனே மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய 8 நகரங்களை மையமாக கொண்டு 8 அணிகள் இதில் பங்கேற்றன. இந்த லீக் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதனால் அடுத்த தொடரில் கூடுதலாக தமிழ்நாடு, ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை மையமாக கொண்டு நான்கு அணிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை அணியை ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் வாங்கியுள்ளது. இதில் சச்சின் தெண்டுல்கர் துணை உரிமையாளராக உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com