முருகன் அஸ்வினை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லை- தெண்டுல்கர் விமர்சனம்

தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீரர் முருகன் அஸ்வினை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லை என்று கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் விமர்சித்துள்ளார்.
சச்சின் தெண்டுல்கர்
சச்சின் தெண்டுல்கர்
Published on

மும்பை:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 223 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது. 224 ரன் இலக்கை எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் ஐ.பி.எல்.லில் புதிய சாதனை படைத்தது.

இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீரர் முருகன் அஸ்வினை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லை என்று கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சுமித், சஞ்சு சாம்சன், திவேதியா ஆகியோரது பேட்டிங் அபாரமாக இருந்தது. பெரிய இலக்கை வெற்றிகரமாக விரட்டினார்கள். அமைதியாக ஆடி பிறகு அதிரடியை வெளிப்படுத்தினார்கள்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் வேகப்பந்து வீரர்கள் யார்க்கர்களை வீசாதது ஆச்சரியமாக இருந்தது. இதேபோல சுழற்பந்து வீரர் முருகன் அஸ்வினையும் சரியாக பயன்படுத்தவில்லை. இது அதிர்ச்சி அளித்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

முருகன் அஸ்வின் இந்த ஆட்டத்தில் 1.3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com