எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு சச்சின் தெண்டுல்கர் இரங்கல்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சச்சின் தெண்டுல்கர்
சச்சின் தெண்டுல்கர்
Published on

மும்பை:

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் இரங்கல் வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஜியின் இசையை கேட்க எப்போதும் விரும்புவேன். அவரது மறைவால் மிகுந்த வருத்தமடைந்தேன். ‘சாகர்’ திரைப்படத்தில் அவர் பாடிய ‘சச் மேரே யார் ஹை’ பாடல் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்றாகும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். எனது பிரார்த்தனையும், நினைவுகளும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனே இருக்கிறது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com