

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக இன்று மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ள உன்னிகிருஷ்ணன் கோவில் நடையை திறந்து, பூஜை செய்தார்.
நாளை முதல் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 3.30 மணி முதல் காலை 11.30 மணி வரை சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும். பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 3 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் கோவில் நடை திறப்பு மற்றும் அடைப்பு நேரங்கள் நீட்டிக்கப்படும்.
டிசம்பர் 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்று இரவு நடை அடைக்கப்பட்டு, மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படுகிறது.