வடகொரியா அணு குண்டு சோதனை எதிரொலி: தென் கொரியா ராணுவ பயிற்சி

உலக நாடுகளின் எதிர்ப்புகளை வடகொரியா அணு குண்டு சோதனை நடத்திவுள்ள நிலையில், தென் கொரியா ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளது.
வடகொரியா அணு குண்டு சோதனை எதிரொலி: தென் கொரியா ராணுவ பயிற்சி
Published on

சியோல்:

உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது.

சுங்ஜிபேகாம் பகுதியில் நேற்று முன் தினம் சக்திவாய்ந்த அணு குண்டினை பூமிக்கு அடியில் வடகொரியா பரிசோதித்ததாக செய்திகள் வெளியானது.

இந்த ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையில் முழுமையான வெற்றி பெற்றதாகவும் வடகொரியா தெரிவித்தது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஐ.நா. சபையும் வடகொரியாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், உலக நாடுகளின் எதிர்ப்புகளை வடகொரியா அணு குண்டு சோதனை நடத்திவுள்ள நிலையில், தென் கொரியா ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com