வடசென்னையில் இன்று சமூக மறுமலர்ச்சி பேரணி துவக்கம்: பிரம்ம குமாரிகள் இயக்கம் ஏற்பாடு

பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில் வடசென்னையில் இன்று சமூக மறுமலர்ச்சி மற்றும் கிராம மேம்பாட்டு பேரணி தொடங்க உள்ளது.
வடசென்னையில் இன்று சமூக மறுமலர்ச்சி பேரணி துவக்கம்: பிரம்ம குமாரிகள் இயக்கம் ஏற்பாடு
Published on

சென்னை:

நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே பண்புகள் நிறைந்த அமைதியான வாழ்க்கையைப் பரப்பும் முயற்சியாக, பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் சார்பில், பண்புகளை வளர்க்கும் ராஜயோக தியானம் பற்றிய படக் கண்காட்சி, வீடியோ காட்சிகள், விளக்க உரைகள் கொண்ட நடமாடும் விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற உள்ளது.

இதன் துவக்க விழா வடசென்னை தண்டையார் பேடையில் உள்ள கேப்டன் மகாலில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவில் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் கலந்துகொண்டு பேரணியைத் துவக்கி வைத்து உரையாற்ற உள்ளார்.

பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் தமிழக மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் பி.கு. பீனா, மண்டல ஊரகத் துறை ஒருங்கிணைப்பாளர் பி.கு. மதன், வண்ணாரப்பேட்டை காமராஜர் மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் கே.ராஜன், டாக்டர் ஜெயச்சந்திரன், கே.சி.எஸ். நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

இந்த சமூக மறுமலர்ச்சி மற்றும் கிராம மேம்பாட்டு விழிப்புணர்வு வாகனம், மாதரப்பாக்கம் வரை நூற்றுக்கணக்கான கிராமங்கள் மற்றும் சிற்றூர்களில் வலம் வர உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com