ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
Published on

வெள்ளகோவில்:

கொரோனா பரவலை கருத்தில் கொள்ளாமல் வளர்ச்சித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நிர்ப்பந்திப்பதை கைவிட வேண்டும். இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் நிலை பதவி உயர்வு ஆணைகளை உடனே வழங்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய மாநில நிதிக்குழு மானியத்தை உடனடியாக விடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி 25 மற்றும் 26-ந் தேதிகளில் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்தது. அதன்படி நேற்றும், நேற்று முன்தினமும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் 2-வது நாளான நேற்று வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதே போல் தாராபுரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் 2-வது நாளாக நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com