கள்ளக்குறிச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மாவட்ட சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மாவட்ட சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கொளஞ்சி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் செல்வபோதகர், குமார், மாவட்ட இணைச்செயலாளர்கள் அரவிந்த், வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் தாஜிதீன் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாநில தலைவர் ரஹீம் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.

ஊரக வளர்ச்சித்துறையில் கொரோனா காலத்தில் பி.எம்.ஏ.ஒய்., எஸ்.பி.எம்., ஜெ.ஐ.எம். ஆகிய திட்ட பணிகளை விரைந்து முடிக்க நிர்பந்தம் செய்வதை கைவிட வேண்டும், கோவை மாவட்டத்தில் பழிவாங்கும் நோக்கத்தில் ஊரகவளர்ச்சித்துறையில் நான்கு ஊழியர்களை மாவட்ட மாறுதல்கள் செய்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். துணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் பதவி உயர்வு ஆணைகளை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட பொருளாளர் கணேசன், நிர்வாகிகள் அண்ணாமலை, ராஜா, பார்வதி, செல்விமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com