ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மி‌ஷம்: போலீஸ்காரர் கைது

ஈரோட்டில் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மி‌ஷம்: போலீஸ்காரர் கைது
Published on

ஈரோடு:

கேரளா மாநிலம் மலப்புரம் இரும்புழி பகுதியை சேர்ந்தவர் ‌ஷரின். இவரது மனைவி உஸ்னா(வயது 26). இவர் நேற்று முன்தினம் எர்ணாகுளத்தில் இருந்து விஜயவாடா செல்வதற்காக ரெயிலில் ஏறினார். அந்த ரெயில் ஈரோடு அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது உஸ்னாவுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்து இருந்த ஒருவர் உஸ்னாவிடம் சில்மி‌ஷத்தில் ஈடுப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த உஸ்னா இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசுக்கு தனது செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ்.அனுப்பினார்.

அந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்ததும் அங்கு தயாராக இருந்த ரெயில்வே போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அந்த வாலிபர் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மல்லப்பள்ளி கீழ்வாய்ப்புரை சேர்ந்த செரியன் (45) எனபதும், அவர் நாக்பூரில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.

இதையடுத்து செரியனை போலீசார் கைது செய்தனர். மேலும் இது குறித்து நாக்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com