அரக்கோணம் ஓடும் ரெயிலில் கேண்டீன் ஊழியர் திடீர் மரணம்

அரக்கோணம் ஓடும் ரெயிலில் நெஞ்சு வலி ஏற்பட்டு கேண்டீன் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரக்கோணம் ஓடும் ரெயிலில் கேண்டீன் ஊழியர் திடீர் மரணம்
Published on

அரக்கோணம்:

ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் முருகன் (வயது 36). இவர் ரெயில்வே கேண்டீன் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். முருகன் இன்று காலை சென்னையில் இருந்து கோவை சென்று கொண்டிருந்த ரெயிலில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

வலியால் துடித்து கொண்டிருந்தவரை கண்ட சக ஊழியர்கள் ரெயில் டிக்கட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தவர்களில் யாரேனும் டாக்டர்கள் உள்ளனரா? என்று விசாரித்தார்.

அப்போது ஒருவர் தான் டாக்டர்தான் என்று கூறி முருகனுக்கு சிகிச்சையளிக்க முன் வந்தார். அவர் முருகனை பரிசோதித்த போது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார்.

அதற்குள்ரெயில் அரக்கோணத்திற்கு வந்தடைந்தது. டிக்கட் பரிசோதகர் ரெயில்வே போலீசாரிடம் முருகனின் உடலை ஒப்படைத்து விட்டு ரெயில் புறப்பட்டது.

இது குறித்து ரெயில்வே போலீசார் உடலை கைபற்றி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com