நெல்லையில் ஓடும் பஸ்சில் மாணவிகளிடம் ‘சில்மி‌ஷம்’ செய்த வாலிபர்

நெல்லையில் ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிகளிடம் ‘சில்மி‌ஷம்’ செய்த போதை வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

நெல்லை:

நெல்லை கல்லூரியை சேர்ந்த சுமார் 20 மாணவ- மாணவிகள் உயர்கல்வி ஆராய்ச்சி குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ள குமரி மாவட்டத்திற்கு சென்றனர். இந்நிலையில் கருத்தரங்கில் கலந்து கொண்டு மீண்டும் அவர்கள் நெல்லைக்கு அரசு பஸ்சில் புறப்பட்டனர்.

அப்போது ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் குடிபோதையில் இருந்த ஒரு வாலிபர் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். இதையறிந்த மாணவிகள், சக மாணவர்கள் மற்றும் டிரைவரிடம் இது குறித்து கூறினர். அவர்கள் அந்த போதை வாலிபரை கண்டித்தனர். எனினும் அவர் தொடர்ந்து மாணவிகளிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு எச்சரித்த மாணவர்களையும், டிரைவரையும் அவதூறாக பேசினார்.

இதையறிந்த மாணவர்கள் நெல்லை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சரவணனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக துணை கமி‌ஷனர் துரிதமாக செயல்பட்டு நெல்லை புதிய பஸ் நிலைய போலீசாருக்கும், மேலப்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

உடனடியாக போலீசார் பஸ் நிலையத்தில் அந்த பஸ்சை எதிர்நோக்கி தயார் நிலையில் நின்றனர். மாணவிகள் வந்த பஸ், புதிய பஸ் நிலையம் வந்ததும் போலீசார் விரைந்து சென்று அந்த போதை வாலிபரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com