ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 13 பவுன் நகைகள் திருட்டு

தனியார் பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 13 பவுன் நகைகளை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருட்டு
திருட்டு
Published on

கோவை:

திருப்பூர் அருகே உள்ள முத்தூர் செல்வா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி தமிழரசி (வயது 62). நேற்று இவர் திருப்பூரில் இருந்து தனியார் பஸ்சில் தெக்கலூருக்கு செல்வதற்காக ஏறினார்.

பஸ்சில் செல்லும் போது தமிழரசி நெக்லஸ், செயின் உள்பட 13 பவுன் தங்க நகைகளை ஒரு கைப்பபையில் வைத்து இருந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் தெக்கலூர் வந்ததும் பஸ்சில் இருந்து தமிழரசி இறங்கினார்.

அப்போது பஸ்சில் பயணம் செய்த மர்மநபர் யாரோ கூட்ட நெரிசலை பயன்படுத்தி தமிழரசி கைப்பையில் வைத்து இருந்த 13 பவுன் தங்க நகைகளை திருடினர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் 13 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com