21-வது நாளாக முடங்கிய மாநிலங்களவை - அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் 21-வது நாளாக பாராளுமன்ற இரு அவைகளும் முடங்கியுள்ளன. #BudgetSession
21-வது நாளாக முடங்கிய மாநிலங்களவை - அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி:

கடந்த மாதம் 5-ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு பெரும்பாலான நாட்கள் முடங்கின. விவாதங்கள் எதுவும் நடத்தப்படாமல் நிதி மசோதா உள்ளிட்ட சில மசோதாக்கல் நிறைவேற்றப்பட்டன. காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, வங்கி மோசடி என பல்வேறு விவகாரங்களில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை கூட்டத்தொடர் முடிய உள்ள நிலையில், 21-வது நாளாக இரண்டு அவைகளிலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். முதலில் மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வி அடைந்ததால் அவை நாள் முழுவதும் சபாநாயகர் ஒத்திவைத்தார். #BudgetSession #LokSabha #RajyaSabha

X

Maalai Malar
www.maalaimalar.com