கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் படுகொலை

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் படுகொலை
Published on

கண்ணூர்:

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கக்கன்பாரா பகுதியை சேர்ந்தவர் பிஜூ(வயது34). இவர் அந்த பகுதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தலைவராக இருந்தார். அவர் நேற்று மாலை 4 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு அருகே முட்டம் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் வந்த ஒரு சொகுசு கார் அவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் பிஜூவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தான் கொலை செய்ததாக பாரதீய ஜனதா கட்சியினர் புகார் கூறி உள்ளனர். இந்த கொலையை கண்டித்து கண்ணூர் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முழுஅடைப்புக்கு பாரதீய ஜனதா அழைப்பு விடுத்து உள்ளது.

இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com