ஆர்.எஸ்.எஸ். கொடும்பாவியை எரித்த கம்யூனிஸ்டு கட்சியினர்

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ். கொடும்பாவி எரிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். கொடும்பாவியை எரித்த கம்யூனிஸ்டு கட்சியினர்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நகர கமிட்டி சார்பில் மணிக்கூண்டு அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை வகித்து பேசினார்.

டெல்லியில் எங்கள் கட்சியின் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி கட்சி அலுவலகத்துக்குள்ளே புகுந்து தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். கம்யூனிஸ்டு கட்சியின் கடைசி தொண்டன் இருக்கும் வரை இந்தியாவில் மதவாத சக்திகள் தலை தூக்க விடமாட்டோம். கடந்த 3 ஆண்டுகளில் மோடி தான் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. சமையல் எரிவாயுக்கான மானியத்தையும் குறைத்து விட்டனர். ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்கின்றனர். மக்கள் விரோத கொள்கைகளையே பா.ஜ.க. கடைபிடித்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ்.இன் கைப் பாவையாக செயல்படும் பா.ஜ.க. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஆர்.எஸ்.எஸ். கொடும்பாவியை கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் தீ வைத்து எரித்தனர். அப்போது போலீசார் அதனை பறித்து தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஆசாத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம், ஒன்றிய செயலாளர் அஜய்கோஸ், மாவட்ட குழு உறுப்பினர்கள் தேவி, ஜானகி, பிரபாகரன், பாலாஜி, போஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com