வடமதுரை அருகே ரூ.5 லட்சம் செக் மோசடி செய்த டாக்டர் கைது

வடமதுரை அருகே ரூ.5 லட்சம் செக் மோசடியில் ஈடுபட்ட டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

வடமதுரை:

திண்டுக்கல் நேருஜி நகரைச் சேர்ந்தவர் லோகநாதன் இவர் வடமதுரை ரெயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள சித்தமருத்துவமனை டாக்டர் முத்துச்சாமியிடம் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ரூ.5 லட்சம் கடனாக கொடுத்தார். அதற்கு ஈடாக டாக்டர் முத்துச்சாமி ஒரு காசோலை ஒன்றை அளித்திருந்தார்.

அதனை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதனால் லோகநாதன் மீண்டும் அவரிடம் பணம் தருமாறு கேட்டார். ஆனால் முத்துச்சாமி இழுத்தடித்து வந்துள்ளார்.

இது குறித்து மதுரை ஐ கோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. செக் மோசடியில் ஈடுபட்ட டாக்டரை கைது செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து வடமதுரை போலீசார் முத்துசாமியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com