நெல்லை அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.1.70 லட்சம் கொள்ளை

நெல்லை அருகே டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1.70 லட்சம் பணத்தை 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.
நெல்லை அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.1.70 லட்சம் கொள்ளை
Published on

நெல்லை:

நெல்லை பழைய பேட்டையை சேர்ந்தவர் காமராஜ் (வயது42). இவர் சுத்தமல்லி அருகே உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்றிரவு இவர் கடையை மூடி விட்டு, விற்பனையான ரூ.1.70 லட்சம் ரொக்க பணத்தை பையில் வைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.

திருப்பணிகரிசல்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியது. இதில் பயந்த காமராஜிடம் கொள்ளையர்கள் ரூ.1.70 லட்சத்தையும் கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். 

இது குறித்து காமராஜ் நெல்லை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்த 3 கொள்ளையர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com