பழனி அருகே கல்லூரியில் ரூ.16 லட்சம் கையாடல் செய்த ஊழியர்

பழனி அருகே கல்லூரியில் ரூ.16 லட்சம் கையாடல் செய்த ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பழனி அருகே கல்லூரியில் ரூ.16 லட்சம் கையாடல் செய்த ஊழியர்
Published on

திண்டுக்கல்:

பழனி அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியின் முதல்வராக இருப்பவர் புவனேஸ்வரி. இவர் திண்டுக்கல் மாவட்ட குற்றப்புரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் தங்கள் கல்லூரியில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் சதீஸ்குமார் (வயது 36) என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 9.11.2016-ந் தேதி கல்லூரியில் நடந்த தணிக்கையின் போது சதீஸ்குமார் ரூ.16 லட்சத்து 11 ஆயிரத்து 92 பணம் கையாடல் செய்தது தெரிய வந்தது.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில் போலீசார் சதீஸ்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com