

கோவை:
ஊட்டி அருகே கெந்தரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இதன் செயலாளராக ராணி (வயது 53) என்பவர் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2015-16-ம் ஆண்டில் கூட்டுறவு சங்கத்தில் பொதுமக்கள் அடகு வைத்த 5 கிலோ 419 கிராம் தங்க நகைகளை , வேறு ஒரு தனியார் நிறுவனத்தில் அடகு வைத்து பணம் மோசடி நடந்ததாக புகார் கூறப்பட்டது. மேலும் கூட்டுறவு சங்கத்தில் ரூ.5 லட்சம் கையாடல் நடந்ததாகவும் தெரிய வந்தது.
இதையடுத்து நீலகிரி மாவட்ட கூட்டுறவு துறை துணை பதிவாளர் முகமது மீரான், கோவை வணிக குற்றப்புலனாய்வு துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து தனிப் படை போலீசார் நடத்திய விசாரணையில் சங்க செய லாளர் ராணி, எழுத்தர் ராஜ்குமார் (46), உறுப்பினர் தேவகுமாரன் (48), நிர்வாக குழு உறுப்பினர் சுந்தர்ராஜன் (4() ஆகிய 4 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதைதொடர்ந்து அவர்கள் 4 பேரும் மீது கூட்டு சதி, மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து 4 பேரும் கைது செய்ப்பட்டனர். பின்னர் அவர்கள் குன்னூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.