ஏடிஎம் எந்திரத்தில் கேட்பாரற்று இருந்த ரூ.10 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு - போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை

ஏ.டி.எம். எந்திரத்தில் கேட்பாரற்று இருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரியவரிடம் ஒப்படைத்தார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பி கிராமத்தை சேர்ந்தவர் பிரபுதாஸ். இவர் கடந்த 1-ந்தேதி கீழம்பியில் உள்ள ஒரு ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க சென்றார், அப்போது, அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் கேட்பாரற்று இருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியாவிடம் ஒப்படைத்தார்.

அவரது உத்தரவின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில்், அந்த பணம் கீழம்பியை சேர்ந்த வரதராஜன் என்பவருடையது என்பது தெரியவந்தது. இது குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்த அவரிடம் ரூ.10 ஆயிரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார். அப்போது வங்கி அதிகாரி உடன் இருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com