தெலுங்கானாவில் ரூ.100 கோடிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டு பறிமுதல்

தெலுங்கானாவில் ரூ.100 கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் சத்திப்பல்லி பகுதியில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவரிடம் கள்ள ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் சத்திப்பல்லியை சேர்ந்த மாதர் என்பவர் தலைமையிலான கும்பல் பொதுமக்களிடம் ரூ.80 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து மாதரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின் பேரில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு ரூ.7 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கள்ளநோட்டுகளை அச்சிட பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் பொருட்களையும் கைப்பற்றினர். மேலும் இக்கும்பல் கம்பம் மாவட்டம் மன்சூடு மண்டலத்தில் உள்ள வீட்டில் ரூ.100 கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வைத்து இருப்பது தெரிந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக மாதர், வெங்கட் நாராயணா, ஆனந்த் உள்பட 6 பேரை கைது செய்தனர். இவர்கள் கள்ள ரூபாய் நோட்டுகளை பொதுமக்களிடம் கொடுத்து ஏமாற்றி வந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com