அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் அமளி - மாநிலங்களவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் அ.தி.மு.க., காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களின் அமளியை தொடர்ந்து வரும் திங்கட்கிழமைக்கு மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. #Rajyasabha
அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் அமளி - மாநிலங்களவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 5-ம் தேதி தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் முடங்கி உள்ளன. 

காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, பி.என்.பி. வங்கி கடன் மோசடி உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் மாநிலங்களவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அ.தி.மு.க., தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களின் தொடர் அமளியை தொடர்ந்து வரும் திங்கட்கிழமைக்கு மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை காலையில் தொடங்கியதில் இருந்தே அ.தி.மு.க. தெலுங்கு தேசம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அ.தி.மு.க. எம்.பிக்கள் தற்கொலை செய்து கொள்வோம் என அ.தி.மு.க. எம்.பி நவநீதகிருஷ்ணன் ஆவேசமாக பேசினார்.

இதையடுத்து அவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனால் துணை தலைவர் குரியன் மாநிலங்களவையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார். #Rajyasabha #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com