புதுவண்ணாரப்பேட்டையில் டாஸ்மாக் கடை சுவற்றில் துளைபோட்டு ரூ.9 லட்சம் கொள்ளை

புதுவண்ணாரப்பேட்டையில் டாஸ்மாக் கடை சுவற்றில் துளைபோட்டு ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவண்ணாரப்பேட்டையில் டாஸ்மாக் கடை சுவற்றில் துளைபோட்டு ரூ.9 லட்சம் கொள்ளை
Published on

ராயபுரம்:

புதுவண்ணாரப்பேட்டை, ஏ.இ. கோவில் தெருவில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. சூப்பர் வைசராக சபரி உள்ளார்.

நேற்று இரவு விற்பனை பணம் ரூ.9 லட்சத்து 28 ஆயிரத்து 200-ஐ கல்லாப் பெட்டியில் வைத்து விட்டு ஊழியர்கள் கடையை மூடிச் சென்றனர்.

நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளைபோட்டு உள்ளே புகுந்தனர். பின்னர் கல்லாப்பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.9 லட்சத்து 28 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.

இன்று காலை ஊழியர்கள் மதுக்கடையை திறக்க வந்த போது சுவற்றில் துளைபோடப்பட்டு பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com