வேலை வாங்கித்தருவதாக ரூ.8 லட்சம் மோசடி: கணவன்-மனைவி மீது வழக்கு

மதுரையில் வேலை வாங்கித்தருவதாக ரூ.8 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பணம் மோசடி
பணம் மோசடி
Published on

மதுரை:

மதுரை சுப்பிரமணியபுரம் வீரமுடையான் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 35). இவர் சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோயமுத்தூர் பாரதி நகரைச் சேர்ந்த கருணாநிதி, அவரது மனைவி தன்யா அறிமுகமானார்கள். அப்போது தன்யா இ.எஸ்.ஐ. தெற்கு மண்டல தலைவராக இருப்பதாக கூறினார்.

மேலும் எனது (பெரியசாமி) மனைவிக்கு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு பணம் தேவைப்படும் எனவும் கூறினார்.

இதை நம்பி கணவன்-மனைவியிடம் ரூ.8 லட்சம் கொடுத்தேன். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் நீண்ட நாட்களாகியும் வேலையும் வாங்கித்தரவில்லை. நான் பணத்தை கேட்டபோது திருப்பித்தர மறுத்து விட்டனர்.

எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் போலீசார் கருணாநிதி, தன்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com