சென்னையில் வேலை வாங்கி தருவதாக ரூ.55 லட்சம் மோசடி

சென்னையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.55 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை:

சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று வாலாஜாபாத் ஐயன் பேட்டை கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் உள்பட 12 பேர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணியுடன் வந்து புகார் மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மனோகர் என்பவர் நண்பர் மூலமாக அறிமுகமானார். அவரும், முத்துசாமி என்பவரும் அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தனர்.

என்னிடமும், எனது நண்பர்களிடமும் ரூ.20 லட்சம் பெற்றுக்கொண்டனர். இந்த பணத்தை சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகில் வைத்து காரில் இருந்து கொண்டு வாங்கினார்கள்.

12 பேரை ஏமாற்றி ரூ.55 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com