சத்தியமங்கலம் பகுதியில் ஒரு சங்கு கழுதைப்பால் ரூ. 50-க்கு விற்பனை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் ஒரு சங்கு கழுதைப்பால் ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கழுதையிடம் இருந்து பால் கறக்கும் பெண்.
கழுதையிடம் இருந்து பால் கறக்கும் பெண்.
Published on

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கழுதைப்பால் விற்பனை செய்பவர்கள் முகாமிட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் ஆண்டு தோறும் சத்தியமங்கலம் பகுதிக்கு வந்து கழுதை பாலை விற்பனை செய்து வருகின்றனர்.

கழுதைப்பால் மருத்துவ குணம் நிறைந்தது. பல்வேறு நோய்களை குணப்படுத்தும் என கூறப்படுகிறது. இதனால் கழுதை பாலை பொதுமக்கள் விரும்பி வாங்கி குடிக்கின்றனர். தற்போது சத்தியமங்கலம் பகுதியில் கழுதைப்பால் விற்பனை செய்பவர்கள் காலை 6 மணி முதல் வீதி, வீதியாக சென்று கூவி, கூவி விற்பனை செய்து வருகின்றனர்.

கழுதைப்பால் கேட்பவர்களுக்கு அவர்களின் கண் முன்னே கறந்து கொடுக்கப்படுகிறது. ஒரு சங்கு கழுதைப்பால் ரூ. 50-க்கும், 50 மி.லி. கழுதைப்பால் ரூ. 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் வாங்கி குடித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com