நீலாங்கரை கட்டுமான அதிபரிடம் ரூ.45 லட்சம் மோசடி- தம்பதி கைது

நீலாங்கரையைச் சேர்ந்த கட்டுமான அதிபரிடம் ரூ.45 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

போரூர்:

நீலாங்கரையைச் சேர்ந்தவர் ஜவஹர். சொந்தமாக கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரை கடந்த டிசம்பர் மாதம் மேற்கு மாம்பலம் ஆர்ய கவுடா சாலையில் வசித்து வரும் விமல் என்பவர் அணுகினார். அப்போது தான் வசித்து வரும் இந்த வீட்டை இடித்துவிட்டு இருவரும் இணைந்து அடுக்குமாடி கட்டி விற்பனை செய்யலாம் என்று கூறினார்.

மேலும் கட்டுமானத்திற்கான பாதி தொகையான ரூ.45 லட்சம் பணத்தை தம்மிடம் கொடுக்குமாறு ஜவஹரிடம் விமல் அப்போது தெரிவித்தார்.

கட்டிடம் கட்டி முடித்து விற்பனை செய்த பின்னர் லாபத்துடன் பணத்தை திருப்பி தருவதாகவும் கூறினார்.

இதை நம்பிய ஜவஹர் ரூ.45 லட்சம் பணத்தை விமலிடம் கொடுத்தார். ஆனால் கட்டுமானம் கட்டி முடிந்த பின்னர் பணத்தையும் திருப்பி தராமல் புதிதாக கட்டிய வீட்டையும் விமல் மற்றும் அவரது மனைவி சோபியா ஆகியோர் அவர்களது பெயருக்கே மாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

இதுகுறித்து அசோக் நகர் போலீசில் ஜவஹர் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீகலா விசாரணை நடத்தி பணம் மோசடியில் ஈடுபட்ட விமல் மற்றும் அவரது மனைவி சோபியா ஆகிய இருவரையும் கைது செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com